பௌர்ணமி போன்ற முகம்அதில்
கயல் மீன்களாய் இரு விழிகள்......
காண்பவர்உள்ளங்களை குழிதோண்டி புதைக்கும்
ஓர் கன்னக்குழி.....கொவ்வைப்பழ இதழ்கள்
அதற்குள்ஆழ்கடல் முத்துக்களாய் பற்கள்.....
புஷ்பங்களை பொறாமைப்பட வைக்கும்உன் புன்சிரிப்பு......
இதமான தென்றலுடன் இழை போல அசையும்
உன் காதோரசுருண்டமுடி.....அத்தனைக்கும் திருஷ்டி பொட்டாய்
கன்னத்தில் ஓர் கறுப்பு மச்சம்......
அத்தனையும் தன்னகத்தே அமைத்துக்கொண்ட
என் அழகே... யார் நீ?????







